ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 304வது பிறந்த நாள்: துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304வது பிறந்த நாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

News image
Updated On :1 செப்டம்பர் 2019, 9:56 am

DIN

நெல்லை: சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304வது பிறந்த நாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவனின் 304வது பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  இதனையொட்டி நெல்லையில் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் 'முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கீழ்தரமான அரசியல் செய்து வருகின்றனர்; நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்'  என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.