டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாளை விநாயக சதுர்த்தி பண்டிகை: முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து  

திங்களன்று விநாயக சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி முதல்வர் மற்றும்  துணை முதல்வர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :1 செப்டம்பர் 2019, 1:53 pm

DIN

சென்னை: திங்களன்று விநாயக சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி முதல்வர் மற்றும்  துணை முதல்வர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்துக்களால் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "விநாயகப் பெருமானின் அவதார நாளில், வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில், "மக்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று நோய் நொடியின்றி வாழ வேண்டும்" என்று வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.