தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாள்: ஸ்டாலின் நேரில்  வாழ்த்து 

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் 94-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் : ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

News image

ஆர்.எம்.வீ - ஸ்டாலின் சந்திப்பு

Updated On :9 செப்டம்பர் 2019, 9:54 am

DIN

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் 94-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் : ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு சிறிதுகாலம் அதிமுகவில் நீடித்தவர் பின்னர் எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியைத்  துவங்கி நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று (09-09-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 94வது பிறந்தநாளையொட்டி அவருடைய இல்லத்துக்கு நேரில் சென்று தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.