ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
கர்நாடகம், கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவானது, வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 30 ஆயிரம் கன அடியாகவும், 11 மணி நிலவரப்படி நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாகவும் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது. மாலை நிலவரப்படி மேலும் தண்ணீரின் அளவு குறைந்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக வந்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு குறைந்த நிலையில், மூழ்கி இருந்த பிரதான அருவி, நடைபாதை, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகள் வெளியே தெரிகின்றன.
குளிக்கத் தடை நீடிப்பு: இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 8-ஆவது நாளாகவும், அருவிகளில் குளிக்க 38-ஆவது நாளாகவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


