திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் சிக்கினர்! சிறையில் களி தயாராகிறது!

கொள்ளையர்கள் எல்லாம் தற்போது வேற லெவலில் பணியாற்றி வருகிறார்கள் என்பதற்கு உதாரணமாக வேலூரில் திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கினர்.
திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் சிக்கினர்! சிறையில் களி தயாராகிறது!
Published on
Updated on
1 min read

வேலூர்: கொள்ளையர்கள் எல்லாம் தற்போது வேற லெவலில் பணியாற்றி வருகிறார்கள் என்பதற்கு உதாரணமாக வேலூரில் திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கினர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தந்தை மகன் உட்பட 4 கொள்ளையர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

நவீத் (21), அவரது தந்தை நாசர் பாஷா (58) மற்றும் வசீன் (19), ரஃபீக்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகள், இரு சக்கர வாகனங்கள் மூன்று, 2 தொலைக்காட்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு வீட்டுக்குள் திருடச் செல்லும் முன், அதனை சில நாட்கள் நோட்டமிடுவார்களாம். அந்த வகையில் தான் ஒரு வீடு 3 நாட்களாக பூட்டியிருந்ததைப் பார்த்து அந்த வீட்டுக்குள் நுழைந்து, தொலைக்காட்சிப் பெட்டி, இருசக்கர வாகனம், தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். முன்னதாக அவர்கள் வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளைபோன போது பதிவான செய்தி இது..

வேலூரில் தென்னாம்பெட் என்ற பகுதியில் திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் சிறிதும் பதற்றமே இல்லாமல், ஏதோ சுற்றுலா வந்தது போல தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு பிறகு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளனர். வீட்டின் சமையலறையில் இருந்த மக்ரோனியை சமைத்து சாப்பிட்டுவிட்டு, வீட்டில் இருந்த எல்இடி டிவி, மைக்ரோவேவ் ஓவன், தங்க நகைகள் மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

பக்காடி தெருவில் உள்ள மொஹம்மது பரூப் என்பவர் வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பரூக் தனது மனைவியுடன் பெங்களூரு சென்று அங்கு தனது மகன் வீட்டில் 3 நாட்கள் தங்கிவிட்டு நேற்று வீட்டுக்கு திரும்பிய போதுதான் தங்களது வீட்டில் கொள்ளைப் போனது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்த கொள்ளையர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருபவர்களா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com