டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தக்கல் திட்டத்தின் படி விவசாய மின் இணைப்பு பெற வரும் 1-ம் தேதி விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் தங்கமணி

தமிழகத்தின் வீடுகள், தொழிற்சாலைகள், வணிகக் கட்டங்கள் என அனைத்துக்கும் மின் வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் மின்சாரத்தை

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:13 am

DIN


விவசாயிகளுக்கான தத்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மின்துறை அமைச்சர் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் வீடுகள், தொழிற்சாலைகள், வணிகக் கட்டங்கள் என அனைத்துக்கும் மின் வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் மின்சாரத்தை விநியோகித்து வருகிறது. இதற்கான மின் விநியோகத்தை ஆங்காங்கே அமைக்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு சாதாரணம், சுயநிதி என இரண்டு பிரிவுகளில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவை மின் வாரியம் ஏற்பதுடன், மின்சாரமும் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. சுயநிதி பிரிவில் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். மின்சாரம் மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் விரைவாக மின் இணைப்பு வழங்கும் நோக்கில் தத்கல் மின் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், நாமக்கல்லை அடுத்த புதுப்பட்டி பகுதியில் உள்ள ஜங்கலாபுரத்தில் சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகரன் தொகுதி நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதீப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்கான தத்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கு செப்டம்பர் 30 ஆம் தேதி டெண்டர் விடப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.

கீழடி அகழாய்வு பொறுத்தவரை தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருவதாகவும், மத்திய அரசோடு இணைந்து அகழாய்வு தொடர்ந்து நடைபெறும். நாட்டின் நலன் கருதி கீழடியை அரசியல் ஆக்காமல் பார்க்க வேண்டும் என்று கூறினார் தங்கமணி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.