201 கலைஞர்கள்-எழுத்தாளர்களுக்கு கலைமாமணி விருதுகள்: 2011 முதல் எட்டு ஆண்டுகளுக்கு அறிவிப்பு 

திரைப்படம்,  எழுத்து உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்காக வழங்கப்படும் கலைமாமணி விருதுகளை தமிழக அரசு வியாழக்கிழமை அறிவித்தது. 

திரைப்படம்,  எழுத்து உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்காக வழங்கப்படும் கலைமாமணி விருதுகளை தமிழக அரசு வியாழக்கிழமை அறிவித்தது. 
கடந்த 2011 முதல் எட்டு ஆண்டுகளுக்கு 201 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை மூன்று சவரன் எடையுள்ள பதக்கமும்,  சான்றிதழும் அடங்கியது. ரூ.1 லட்சம் காசோலையுடன் சான்றிதழும் அடங்கிய பாரதி, பாலசரஸ்வதி விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண்டு வாரியாக அதன் விவரம்:-
2011-ஆம் ஆண்டு:  கீழாம்பூர் எஸ்.சங்கரசுப்பிரமணியன் (இயற்றமிழ்),  முனைவர் கோவி.மணிசேகரன் (இயற்றமிழ்),  லேனா தமிழ்வாணன் (இயற்றமிழ்),  திருப்பூர் கிருஷ்ணன் (இயற்றமிழ்),  சி.ராமசாமி (இயற்றமிழ் கவிஞர்),  நெய்வேலி ஆர்.சந்தானகோபாலன் (குரலிசை),  லால்குடி ஜெ.விஜயலட்சுமி (வயலின்),  சேர்த்தலை ஆர்.அனந்தகிருஷ்ணன் (மிருதங்கம்),  முனைவர் பிரபஞ்சம் எஸ்.பாலச்சந்திரன் (புல்லாங்குழல்),  டி.இ. பழனிச்சாமி (நாகஸ்வரம்),  கோவிலூர் கே.வி. பழனிவேல் (தவில்),  பல்லடம் எஸ்.வெங்கடரமணா ராவ் (ஆர்மோனியம்),  ஜனார்தன் மிட்டா (சித்தார்),  அபஸ்வரம் ராம்ஜி (மெல்லிசை),  ராதிகா சுர்ஜித் (பரதநாட்டிய ஆசிரியர்),  லட்சுமி ராமசாமி (பரத நாட்டியம்),  கே.சூரியஸ்ரீ (குச்சுப்புடி),  டி.கே.எஸ். புகழேந்தி (நாடக நடிகர்),  டி.வெங்கட்ராமன் (நாடக நகைச்சுவை நடிகர்),  எம்.எஸ்.பி. கலைமணி (இசை நாடக நடிகர்),  ஆர்.ராஜசேகர் (திரைப்பட நடிகர்),  பி.ராஜீவ் என்கிற பி.ராஜசேகர் (திரைப்பட நடிகர்),  குட்டி பத்மினி (திரைப்பட நடிகை),  பி.பாண்டு (நகைச்சுவை நடிகர்),  புலியூர் எஸ்.சரோஜா (திரைப்பட நடன இயக்குநர்),  பி.எஸ்.சசிரேகா (பின்னணிப் பாடகி),  பி.காசி (திரைப்பட உடை அலங்காரம்),  ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் (கலை விமர்சகர்),  குன்னியூர் ஆர்.கல்யாணசுந்தரம் (விகடம்),  ஏ.இராஜகிளி (வில்லிசை)
2012-ஆம் ஆண்டு:  முனைவர் வாசுகி கண்ணப்பன் (இயற்றமிழ்),  முனைவர் கி.சேகர் (இயற்றமிழ்),  இலக்கியவீதி இனியவன் (இயற்றமிழ் கவிஞர்),  தமிழருவி மு.பெ. இராமலிங்கம் (இலக்கிய சொற்பொழிவாளர்),  எஸ்.ஆர். அசோக்குமார் (சலன்) - பத்திரிகையாளர்,  ஆ.சுப்புலட்சுமி கணபதி (நூலாசிரியர்),  மகாராஜபுரம் ச.இராமச்சந்திரன் (குரலிசை), மகாநதி டாக்டர் ஷோபனா விக்னேஷ் (குரலிசை), முடிகொண்டான் எஸ்.என்.ரமேஷ் (வீணை),  டி.ரவிச்சந்திரமோகன் (புல்லாங்குழல்),  பி.வி.திருமூர்த்தி (நாகஸ்வரம்),  ஏ.பி.அய்யாவு (நாகஸ்வரம்),  எம்.ஆர். தீனதயாளு (மோர்சிங்),  உடையளூர் கே.கல்யாணராமன் (ஆன்மிக இசை சொற்பொழிவாளர்),  எம்.யூ. பிரேம்குமார் (இசை நாடக ஆர்மோனியம்),  விசாகா ஹரி
(சொற்பொழிவு,  ஹரிகதை விற்பன்னர்),  அனிதா குஹா (பரதநாட்டிய ஆசிரியர்),  பாலதேவி சந்திரசேகர் (பரதநாட்டியம்),  ரேவதி ராமச்சந்திரன் (பரதநாட்டியம்),  ஆர்.மகாலிங்கம் (பாகவதமேளம்),  என்.மகாலிங்கம் (மாலி-நாடக நடிகர்),  எஸ்.எஸ். செண்பகமுத்து (நாடகம்,  திரைப்பட நடிகர்),  என்.எஸ். பார்வதி (நாடக நடிகை),  டி.ராஜஸ்ரீ (திரைப்பட நடிகை),  பி.ஆர்.வரலட்சுமி (திரைப்பட நடிகை),  எஸ்.உலகநாதன் (கானா பாடல் கலைஞர்),  சித்ரா லட்சுமணன் (திரைப்பட இயக்குநர்),  பாபு என்கிற என்.வி. ஆனந்தகிருஷ்ணன் (திரைப்பட ஒளிப்பதிவாளர்), சிவாஜிராவ் (காவடியாட்டம்),  எஸ்.யோகலிங்கம் (புரவியாட்டம்).
2013-ஆம் ஆண்டு: பால. இரமணி (இயற்றமிழ்), தா.கு.சுப்பிரமணியன் (நூலாசிரியர்), சுபா கணேசன் (குரலிசை), சுகந்தா காளமேகம் (குரலிசை), பி.ஜி.வெங்கடேஷ் (வயலின்), ராஷ்மி மேனன் (மோகினியாட்டம்), சி.வி.சந்திரமோகன் (நாடகநடிகர்-இயக்குநர்), ஆர்.கிருஷ்ணராஜ் (பின்னணிப் பாடகர்), பிரசன்னா (நடிகர்), நளினி (திரைப்பட நடிகை), காஞ்சனா தேவி (திரைப்பட நடிகை), சாரதா (திரைப்பட நடிகை), ஆர்.பாண்டியராஜன் (நடிகர்), டி.பி.கஜேந்திரன் (நடிகர்), ஜூடோ கே.கே.ரத்னம் (சண்டை பயிற்சியாளர்), வேல்முருகன் (நாட்டுப்புற பாடல் கலைஞர்), பரவை முனியம்மா (நாட்டுப்புற பாடகி), சோமசுந்தரம் (பொம்மலாட்டம்), கோ.திருஞானம் (சிற்பக்கலைஞர்).
2014-ஆம் ஆண்டு: முனைவர் அய்க்கண் (இயற்றமிழ்), இரா.கமலக்கண்ணன் (நூலாசிரியர்), மா.திருநாவுக்கரசு (கவிஞர்), மீரா நாதன் (குரலிசை), சகோதரிகள் ஆர்.விஜயலட்சுமி, ஆர்.சித்ரா (குரலிசை), பாலசாய் (புல்லாங்குழல்), நாகஸ்வர தம்பதிகள் கே.எஸ்.செந்தில்முருகன், சாந்தி செந்தில்முருகன் (நாகஸ்வரம்), பந்தநல்லூர் பாண்டியன் (பரதநாட்டியம்), டி.எம்.சுப்ரமணியன் (நாடக நடிகர்), யு.எம்.கண்ணன் (நாடக நடிகர்), பி.கே.செல்வம் (நாடக நடிகர்), கார்த்தி (நடிகர்), சரவணன் (நடிகர்), பொன்வண்ணன் (நடிகர்), சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்), மாலதி (திரைப்பட பாடகி), என்.ஏ.தாராமாஸ்டர் (நடன இயக்குநர்), ஏ.வி.ஜெயராம் (பண்பாட்டுக் கலை பரப்புநர்),  நியூஸ் ஆனந்தன் (மூத்த பத்திரிகையாளர்),  கே.ஏ. சத்தியபாலன் (நாட்டுப்புற பாடல் கலைஞர்)
2015-ஆம் ஆண்டு: ஏ.கே.பி.கதிர்வேலு (இயற்றமிழ் கவிஞர்), சியாமளா வெங்கடேசன் (குரலிசை), ஆ.வடிவேலன் (குரலிசை), ர.ஹேமலதா (வயலின்), வைத்தியநாதன் (மிருதங்கம்),  கீதா கிருஷ்ணமூர்த்தி (வீணை), டி.பி.ஜெ.செல்வரத்னம் (நாகஸ்வரம்), மயில்சாமி (சாக்சபோன்), சரயுசாய் (பரதநாட்டியம்), சூரிய நாராயணமூர்த்தி (பரதநாட்டியம்), மாது பாலாஜி (நாடக நடிகர்), பிரபு தேவா (திரைப்பட நடிகர்), ஏ.என்.பவித்ரன் (திரைப்பட இயக்குநர்), விஜய் ஆண்டனி (இசையமைப்பாளர்), யுகபாரதி (பாடலாசிரியர்), ஆர்.ரத்தினவேலு (ஒளிப்பதிவாளர்), கானா பாலா (பாடகர்), பாரதி திருமகன் (வில்லிசை), 
எஸ்.ஆண்ட்ரூஸ் (பம்பை வாத்தியம்), சுதா (நிகழ்ச்சி தொகுப்பாளர்).
2016-ஆம் ஆண்டு: கொ.மா.கோதண்டம் (இயற்றமிழ்), பாவலர் க.குகானந்தம் (இயற்றமிழ்), நிர்மலா சுந்தரராஜன் (குரலிசை), சந்துரு (ஆர்மோனியம்), விஜயகோபால் (புல்லாங்குழல்), எம்.கே.எஸ்.நடராஜன் (நாகஸ்வரம்), எஸ்.ஜெயசந்திரன் (தாளவாத்ய இசை), பத்மா சங்கர் (வயலின்), ஜெயந்தி ராமச்சந்திரா (பரதநாட்டியம்), ராஜேஷ்வரி சாய்நாத் (பரதம்), ஸ்ரீஹரி (நாடகம்), எம்.சண்முகம் (நாடகம்), ஸ்ரீலேகா ராஜேந்திரன் (சின்னத்திரை), சசிகுமார் (நடிகர்), எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்), தம்பி ராமையா (நடிகர்), எம்.சூரி (நடிகர்) ராஜகோபாலன் (சமய சொற்பொழிவாளர்), தாராபுரம் சி.கலாராணி (நாட்டுப்புறக் கலை), நெல்லை சுந்தரராஜன் (பத்திரிகையாளர்).
2017- ஆம் ஆண்டு:  எஸ்.சௌம்யா (குரலிசை), பிரேமா ரங்கராஜன் (குரலிசை), சூரியபிரகாஷ் ( குரலிசை), எச்.சிவராமகிருஷ்ணன் (கடம்), ஏ.என்.பாக்யலட்சுமி (புல்லாங்குழல்), ரங்கநாத பட்டாட்ச்சாரியார் (தவில்), சம்பந்த ஓதுவார் (தேவார இசை), டி.லோகநாத சர்மா (குரலிசை), ஸ்ரீராம் பரசுராம் (குரலிசை), ரோஜா கண்ணன் (பரதம்), பிரியா முரளி (பரதம்), ஆர்.எஸ்.ஜெயலதா (இசை நாடக நடிகை), சிவன் ஸ்ரீனிவாசன் (சின்னத்திரை), நல்லசிவம் (நாடக நடிகர்), விஜய்சேதுபதி (நடிகர்), பிரியா மணி (நடிகை), சிங்கமுத்து (நடிகர்), ஜி.ஹரி (இயக்குநர்), யுவன் சங்கர் ராஜா (இசையமைப்பாளர்), கலைஞானம் (தயாரிப்பாளர்), சேஷாத்திரி நாதன் சுகுமாரன் (புகைப்படக் கலைஞர்), ஸ்டில்ஸ் ரவி (புகைப்படம்), ராஜநிதி (கைச்சிலம்பு), தவமணி (கரகாட்டம்), ராஜா (கொம்பு தப்பட்டை), சமுத்திரம் (நையாண்டி மேளம்), சுஜாதா சிவபிரசாத் (வில்லிசை), பிரகாஷ் 
எம்.சுவாமி (பத்திரிகையாளர்).
2018- ஆம் ஆண்டு: அமுத குமார் (மருத்துவ நூல் ஆசிரியர்), ரமணன் (கவிஞர்), கணேசன் (இயற்றமிழ்), நிர்மலா பெரியசாமி (இயற்றமிழ்), மணவை பொன்மாணிக்கம் (இயற்றமிழ்), ஏ.எம்.ஜேம்ஸ் (நூலாசிரியர்), எஸ்.ஜே.ஜனனி (குரலிசை), லட்சமி மோகன் (குரலிசை), வித்யா சுப்ரமணியன் (குரலிசை), பிரியா சகோதரிகள் சண்முகப்பிரியா, ஹரிப்பிரியா (குரலிசை), ராஜ்குமார் பாரதி (குரலிசை), மணிபாரதி (வயலின்), வீணை எம்.ராகவன் (வீணை), திருப்பனந்தாள் எஸ்.பாலசுப்பிரமணியம் (நாதஸ்வரம்), கே.சத்தியநாராயணன் (கீ போர்டு), வி.ராஜா (மெல்லிசை), பத்மலட்சுமி சுரேஷ் (பரதநாட்டியம்), நந்தினி ரமணி (பரதநாட்டியம்), லாவண்யா சங்கர் (பரதநாட்டியம்), நிவேதிதா பார்த்தசாரதி (பரதநாட்டியம்), பினேஷ் மகாதேவன் (பரதநாட்டியம்), லதா ராஜேந்திரன் (பரதநாட்டியம்), பி.முரளிதரன் (பரதநாட்டியம்), வரதராஜன் (நாடக நடிகர்), ஸ்ரீகாந்த் (நடிகர்), சந்தானம் (நகைச்சுவை நடிகர்), ஏ.எம்.ரத்னம் (தயாரிப்பாளர்), ரவிவர்மன் (ஒளிப்பதிவாளர்), உன்னிமேனன் (பின்னணிப் பாடகர்), முத்துலட்சுமணராவ் (தோற்பாவை கூத்து), பி.முத்துச்சந்திரன் (தோற்பாவைக் கூத்து), கே.குமரவேல் (பம்பை), எஸ்.ஏ.கருப்பையா (நையாண்டி மேளம்), கோவிந்தராஜ் (கொக்கலிக்கட்டை).  
அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழகக் கலைஞர்களுக்கான விருதுகள்...
2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டுகளுக்கான விருதுபெறும்   அகில இந்திய  அளவில் புகழ்பெற்ற  தமிழகக்கலைஞர்கள் பட்டியல்:
பாரதி விருது:  புலவர் புலமைப்பித்தன் (கவிஞர்- பாடலாசிரியர்),  கவிஞர் சுப்பு ஆறுமுகம் (வில்லிசை),  சிவசங்கரி (எழுத்தாளர்)
பாலசரஸ்வதி விருது: சி.வி.சந்திரசேகர் (பரதநாட்டியம்),  வைஜெயந்தி மாலாபாலி (பரதநாட்டியம்),  வி.பி.தனஞ்ஜெயன் (பரதநாட்டிய ஆசிரியர்)
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது:  எஸ்.ஜானகி (திரைப்படபாடகி),  பாம்பே சகோதரிகள் சி.சரோஜா- சி.லலிதா (கர்நாடக இசைக் கலைஞர்கள்),  டி.வி. கோபாலகிருஷ்ணன் (கர்நாடக இசைக் கலைஞர்).
கேடயம் பெறும் சிறந்த கலை நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல்:
ஸ்ரீ கிருஷ்ணா கான சபா, சென்னை,  பாரதீய வித்யா பவன்,  சென்னை,  சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ், சேலம்.
சுழற்கேடயம் பெறும் சிறந்த நாடகக் குழு: குட்வில் ஸ்டேஜ், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com