வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை காரணமாக எந்த ஒரு ஊழியரின் வேலையும் பறிபோகாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.
வரித் துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த வாரத்தில் 10 பொதுத் துறை வங்கிகளை இணைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை முன்னிறுத்தி பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. அதனை முன்னிறுத்தி அரசுக்கு எதிராக எழுந்துள்ள கருத்துருவாக்கத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.
மத்திய அரசு முன்னெடுத்துள்ள வங்கி இணைப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள் மேம்பாடு அடையுமே தவிர, எந்த விதமான எதிர்விளைவுகளும் ஏற்படாது.
இணைப்பு நடவடிக்கை காரணமாக சில வங்கிகள் மூடப்படக் கூடும் என்று தகவல் பரப்பப்படுகிறது. அது முழுக்க, முழுக்க தவறான கருத்து.
எந்த ஒரு வங்கியும் மூடப்படாது. வங்கிகள் இணைப்பை காரணம் காட்டி எந்த ஊழியரையும் பணி நீக்கம் செய்யப் போவதில்லை. இந்தக் கருத்தை திட்டவட்டமாகவும், உறுதிபடவும் தெரிவிக்கிறேன். வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு அவற்றுக்கு கூடுதல் முதலீடு அளிக்கப்படும்.
ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கை: ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஆட்டோ மொபைல் சார்ந்த சேவை மற்றும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்து கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் என்னால் வரி குறைப்பை அமலாக்க இயலாது என்றார்.
நாட்டின் நிதிச் சூழல் மோசமாகிவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியது குறித்து பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


