தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கீழடி அகழாய்வில் வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில்,  வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டறியப்பட்டது.

News image

 கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் திங்கள்கிழமை கண்டறியப்பட்ட தொழில்கூடச் சுவர்.

Updated On :9 செப்டம்பர் 2019, 7:23 pm


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில்,  வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டறியப்பட்டது.
கீழடியில் தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம், தலைமையில் தற்போது 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, இங்குள்ள 5 பேர்களின் நிலங்களில் குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய  மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை என 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியனவும் கண்டறியப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை, போதகுரு என்பரது நிலத்தில் தோண்டப்பட்ட குழியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரின் மூலம் இப்பகுதியில் ஏதோவொரு தொழில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சுவர் நீண்டுகொண்டே செல்கிறது. தொடர்ந்து இந்த சுவரை ஒட்டி குழிகள் தோண்டப்பட்டால், இதன் நீளம் மற்றும் அது எங்கு முடிவடைகிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் 
தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.