புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்
கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர்.


கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர்.
அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 18 பணியிடங்களில் வேலை பார்த்து வந்த மொத்தம் 13,225 பேர் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
அத்தகைய தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் உத்தரவின்படி, நிவாரண உதவிகளை வழங்குவது பற்றி, தமிழக அரசுடன் மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதன்படி, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்தத் தொழிலாளர்களுக்கு, 225.335 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. இந்தப் பொருட்களின் மதிப்பு ரூ.84,33,494 ஆகும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட நிவாரணப் பெட்டகம் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 5-ஆம்தேதி, சென்னையில், இந்த நிவாரணப் பொருட்கள் மத்திய தொழிலாளர் நலத் துணைத் தலைமை ஆணையர் முத்து மாணிக்கத்தால் விநியோகிக்கப்பட்டது. மண்டல தொழிலாளர் நல ஆணையர்கள் சிவராஜன், அண்ணாதுரை, உதவி தொழிலாளர் நல ஆணையர் பிரவீன் பாண்டி மோகன்தாஸ், அமலாக்க அதிகாரி சங்கர ராவ் மற்றும் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நாட்டிலேயே, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது போன்ற உணவுப் பொருட்கள் மத்திய தொழிலாளர் நல ஆணையரால் வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று சென்னை, மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் வி.முத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...