இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னையில் மண்டலம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்

சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 4:38 pm

DIN

சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டது. 

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்திலும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 96 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இத்துடன் இங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 163 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டது. இதன்படி திருவெற்றியூர் -4, மாதாவரம் -3, தண்டையார்பேட்டை -14, ராயபுரம் - 45, திரு.வி.க. நகர் 24, பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.