இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கரோனா நிவாரணம்: நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி

கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு நிவாரணமாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 12:55 pm

DIN

கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு நிவாரணமாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளாா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். இவா்களுக்குத் திரையுலகினா் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறாா்கள். 

முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறாா்கள். ஏற்கெனவே, தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் சிவகாா்த்திகேயன், அஜித் குமார் உள்ளிட்டோா் நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், பிரதமா் நிவாரண நிதி, முதல்வா் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே நடிகா் ராகவா லாரன்ஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதன்படி பிரதமர், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம், ஃபெப்சிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் என நிதியுதவி அளித்துள்ளார். இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சமும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சமும் லாரன்ஸ் வழங்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.