இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் வழிபாடு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிருஸ்துவர்களின் தவக்கால நிகழ்வாக பெரிய வியாழன் வழிபாடுகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றன. 

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 3:15 pm

DIN

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிருஸ்துவர்களின் தவக்கால நிகழ்வாக பெரிய வியாழன் வழிபாடுகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றன. 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில்
கிருஸ்துவர்களின் தவக்கால நிகழ்வுகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, கடந்த பிப். 26-ஆம் தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் கிருஸ்துவர்களின் தவக்கால நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன.

உலகளாவிய அளவில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட்டதன் காரணமாக, மார்ச் 20-ஆம் தேதி முதல் வேளாங்கண்ணி பேராலயம் மூடப்பட்டது. பக்தர்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் யாருமின்றி வழக்கமான வழிபாடுகள் மட்டும் சம்பிரதாயமாக நடைபெற்று வருகின்றன.

இதன்படி, தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பெரிய வியாழன் நிகழ்ச்சி பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. பேராலய துணை அதிபர் சூசைமாணிக்கம் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, நற்கருணை ஆராதனை  நடைபெற்றது.

பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர், தியான இல்ல இயக்குநர் ஜான்சன் மற்றும் உதவிப் பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், இந்த வழிபாடுகளை  பேராலய இணையதள தொலைக்காட்சியில் பக்தர்கள் காண வழிவகை செய்யப்பட்டிருந்தது.

பாதம் கழுவுதல் ரத்து... 

இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் முன்பாக தனது சீடர்களின் பாதங்களைக் கழுவி புனிதப்படுத்திய வரலாற்றின் அடிப்படையில், பெரிய வியாழன் நிகழ்ச்சியில் பேராலய அதிபர் அல்லது துணை அதிபர் ஆகியோர் இறைமக்கள் 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிடுவது வழக்கம்.

நிகழாண்டில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற சுகாதார அறிவுறுத்தல்படி, சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.