திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய தில்லி இளைஞர் செங்கல்பட்டில் கைது

கரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய தில்லி இளைஞர் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :14 ஏப்ரல் 2020, 1:43 pm

கரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய தில்லி இளைஞர் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த மாதம் புதுவைக்கு வேலை தேடி வந்து, அரசின் ஊரடங்கு உத்தரவால் விழுப்புரத்தில் தஞ்சமடைந்த தில்லியைச் சோ்ந்த 31 வயது இளைஞா், உடல் நலம் பாதிப்பால் விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதனைக்கு உள்படுத்திய சுகாதாரத் துறையினா், நோய் தொற்றில்லை எனக் கூறி விடுவித்தனா்.

பின்னர் அவரது ரத்த மாதிரி பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து, 4 தனிப்படைகள் அமைத்து அவரை விழுப்புரம், கடலூா் மாவட்டப் பகுதிகள் மற்றும் புதுவையில் காவல்துறையினர் தேடி வந்தனர். கரோனா வைரஸ் தொற்றுடன் தில்லி இளைஞரை அலட்சியமாக வெளியே விட்டதாக, சுகாதாரத் துறையினா் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன், அவா் மூலம் எளிதில் பிறருக்கு நோய் தொற்று ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவியது.

இந்த நிலையில் கரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய தில்லி இளைஞரை செங்கல்பட்டு அருகே படாலம் பகுதியில் விழுப்புரம் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.