மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீ: 8 கடைகள் எரிந்து நாசம்

திருச்சி: திருத்தி காந்தி மார்க்கெட்டில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 கடைகள் எரிந்து நாசமாயின.

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 6:51 am

திருச்சி: திருத்தி காந்தி மார்க்கெட்டில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 கடைகள் எரிந்து நாசமாயின. 

திருச்சி மாவட்டத்தின் பிரதான காய்கனி மற்றும் அனைத்து வகை பொருள்கள் கிடைக்கும் சந்தையாக இருப்பது காந்திமார்கெட். மளிகை, காய்கனிகள், பழங்கள், பலசரக்குகள், பிளாஸ்டிக், ஜவுளி என அனைத்துமே இந்த பகுதியில் மொத்தமாக கிடைப்பதால் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து இங்கு வந்து செல்வர். கரோனா முன்னெச்சரிக்கையாக இந்த மார்கெட் மூடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், திங்கள்கிழமை மார்க்கெட்டிலிருந்து கரும்புகை வருவதை அப்பகுதியில் இருந்த மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்தனர். அதற்குள்ளாக மார்கெட்டிலிருந்த 8 கடைகள் முழுவதும் எரிந்து நாசமானது. ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைத்தனர். 

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.