சென்னையில் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழக சுகாதாரத்துறை மூலம் ஊடகப் பிரிவினருக்காக சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு இந்த முகாமை தொடக்கி வைத்தார். முதல்கட்டமாக இந்த முகாமில், திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து நாளிதழ், வார இதழ், மாத இதழ், மாதமிருமுறை, வாரமிருமுறை இதழ் உள்ளிட்ட இதழ்களில் பணிபுரியும் புகைப்பட கலைஞர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
இதேபோல, காட்சி ஊடகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி விடியோ ஒளிப்பதிவாளர்களுக்கும் கரோனை பரிசோதனை நடத்தப்பட்டது. 40 பேருக்கு ரத்த மாதிரகள் எடுத்து ரேபிட் கிட் கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


