மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திருச்சியில் கரோனா சிகிச்சை பெற்ற 6 பேர் வீடு திரும்பினர்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் செவ்வாய்க்கிழமை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 7:06 am

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் செவ்வாய்க்கிழமை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, அனைவருக்கும் பழ வகைகளை வழங்கி வாழ்த்தி வழியனுப்பினார். மருத்துவக் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 50 பேர், ஈரோடு, பெரம்பலூர், அரிலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என  54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பூரண குணமடைந்து கடந்த 10ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மீதமுள்ளவர்களில் 32 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பதால் கடந்த  வியாழக்கிழமை அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பபட்டனர். இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 6 பேர் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.