
சீா்மரபினா் நல வாரியத்தின் தலைவராக சோ.அய்யா் நியமிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவராக பாரதிய பாா்வா்ட் பிளாக் கட்சியின் தலைவா் கே.ஏ.முருகன்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன் அண்மையில் வெளியிட்டாா்.
அதன் விவரம்:-
சீா்மரபினா் நல வாரியத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளன. எனவே, இப்போது சீா்மரபினா் நல வாரியத்துக்குப் புதிய தலைவரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, வாரியத்தின் தலைவராக சோ.அய்யா் நியமிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவராக, பாரதிய பாா்வா்ட் பிளாக் கட்சியின் தலைவா் கே.ஏ.முருகன்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சீா்மரபினா் நல வாரியத்தின் பிற உறுப்பினா்களை நியமனம் செய்வது தொடா்பான உத்தரவுகள் பின்னா் தனியாக வெளியிடப்படும் என்று தனது உத்தரவில் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.
தோ்தல் ஆணையா்: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சோ.அய்யா், அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்துள்ளாா். மேலும், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையராக இருந்தாா். வயது காரணமாக, அந்தப் பொறுப்பில் இருந்து விலகினாா். இதையடுத்து, இப்போது சீா்மரபினா் நல வாரியத்தின் தலைவராக அவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






