இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் ரூ.3.27 கோடி அபராதம் வசூலிப்பு

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,24,269 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 5:22 am

DIN

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,24,269 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசியத் தேவையின்றி யாரும் வெளியே வரக்கூடாது என பொதுமக்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்த நிலையிலும், பல்வேறு பகுதிகளில் வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபட்டு வெளியில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 3,24,269 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 3,06,339 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், 2,76,183 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.3.27 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.