ஈரோடு அம்மா உணவகங்களில் பாக்குமட்டை தட்டில் உணவு விநியோகம் 

கூட்ட நெரிசலால் தட்டுகளை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஈரோட்டில் உள்ள அம்மா உணவகங்களில் பாக்குமட்டை தட்டில் உணவு விநியோகம் செய்யப்பட்டது.
ஈரோடு அம்மா உணவகங்களில் பாக்குமட்டை தட்டில் உணவு விநியோகம் 

கூட்ட நெரிசலால் தட்டுகளை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஈரோட்டில் உள்ள அம்மா உணவகங்களில் பாக்குமட்டை தட்டில் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருவதோடு பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளான ஈரோடு அரசு மருத்துவமனை, காந்திஜி ரோடு, நாச்சியப்பா வீதி, வஉசி பூங்கா, சின்னமார்க்கெட், சூளை, கொல்லம்பாளையம் உள்ளிட்ட11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு இங்கு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. 11 உணவகங்களிலும் தினமும் 12 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சனிக்கிழமை அமலுக்கு வந்தது. இதையடுத்து அம்மா உணவகங்ளில் நேற்று கூட்டம் அலைமோதியது. உணவகங்களின் இடவசதிக்கு ஏற்ப ஒவ்வொரு குழுவாக உள்ளே அனுமதிக்கப் பட்டனர்.

ஒரு குழுவினர் சாப்பிட்டு வெளியே வந்த பிறகு தான் அடுத்த குழுவினர் செல்ல முடியும் என்பதால் கூட்டம் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர். இதில், உணவகத்தில் பயன்படுத்தி சில்வர் தட்டுகளை கழுவி சுத்தம் செய்து உணவு அளிக்க முடியாமல் உணவக பணியாளர்கள் தவித்தனர். இதையடுத்து கூட்டம் அதிகம் உள்ள உணவகங்களில் பாக்கு மட்டை தட்டு மூலம் உணவு வழங்கும் புதிய முறை நேற்று முதல் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் கூறியதாவது:
அம்மா உணவகங்களில் இலவச உணவு திட்டம் தொடங்கப்பட்ட பின்பு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இடவசதிக்கு தக்கபடி உணவு சப்பிட வைத்து வெளியில் அனுப்பினோம். ஆனால், பலர் வெயிலில் பலர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதை சரிசெய்யும் வகையில் கூட்டம் அதிகமாக உள்ள அம்மா உணவகங்களில் பாக்கு மட்டை தட்டு மூலம் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. நேற்று 12 ஆயிரம் தட்டுகள் பயன்படுத்தப்பட்டது. உணவு சாப்பிட வரும் மக்களிடம் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com