ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் ரௌடி, தலையை வெட்டிக்கொலை
ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரௌடி தலை துண்டித்து இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரௌடி தலை துண்டித்து இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் வசிக்கும் ஜோதிமணியின் மகன் சந்திரமோகன். இவர் பிரபல ரௌடி. பல கொலை வழக்குகளில் கொலை முயற்சி வழக்குகளும் இவர் மீது உள்ளது. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால்காரர் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டதால் இவரை இப்பகுதி மக்கள் தலைவெட்டி சந்திரமோகன் என்று அழைத்து வந்தனர்.
இவருக்கு இப்பகுதியில் முன்விரோதம் அதிகம் இருந்து வந்தது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரயில்வே டிரைனேஜ் தெருவில் வசிக்கும் சுரேஷ்(35), சரவணன் வயசு(30) இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் மற்றொருவர் செல்வகுமார்(25), 3 பேரும் காரில் வந்து ஸ்ரீரங்கம் ரயில்வே பாலத்தின் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ரௌடி சந்திரமோகனை வழிமறித்து தலையை துண்டித்தனர்.
பின்னர் அதே காரில் தலையுடன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர். மேலும் இதுகுறித்து காவல் நிலைய விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே, சந்திரமோகனால் கொல்லப்பட்ட பால்காரரின் மகனும் நண்பர்களும்தான் இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...