அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போடி கொட்டகுடி ஆற்றில் தாலி பெருக்கு பூஜைக்குத் தடை: பெண்கள் ஏமாற்றம்

போடி கொட்டகுடி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை தாலி பெருக்கு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதால் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

News image
கொட்டகுடிஆற்றில் தாலி பெருக்கு பூஜைக்கு கடந்த ஆண்டு கூடிய பெண்கள் (கோப்பு படம்)
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

போடி கொட்டகுடி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை தாலி பெருக்கு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதால் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆடி 18-ஆம் பெருக்கு அன்று போடி கொட்டகுடி ஆற்றில் காசி விசுவநாதர் கோவில் அருகே பெண்கள் தாலி பெருக்கு பூஜை நடத்துவது வழக்கம். ஆற்றங்கரையில் பெண்கள் காவிரித்தாயின் உருவத்தை அமைத்து, தங்க நகைகள் அணிவித்து, பூ, பழங்கள் படைத்து பூஜை செய்து, பெண்கள் தங்கள் தாலிகளை புதுப்பித்து அணிந்து கொள்வர். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வகையான உணவு தயார் செய்து கொண்டு வந்து தங்களுக்குள் பரிமாறிக்கொள்வர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறன்று தளர்வற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் போடியில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொட்டகுடி ஆற்றில் வழக்கமாக நடைபெறும் தாலி பெருக்கு பூஜை குறித்து நகராட்சி நிர்வாகமோ, சுகாதாரத் துறையோ, காவல் துறை சார்பிலோ எவ்வித தடையும் விதித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதனால் வழக்கமாக பிற்பகலில் பெண்கள் பூஜைக்கான ஏற்பாடுகளுடன் போடி கொட்டகுடி ஆற்றுக்குச் சென்றனர். ஆனால், அங்கு போடி நகர் காவல் நிலைய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தாலி பெருக்கு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே வீடுகளுக்கு சென்று பூஜை செய்து கொள்ளும்படியும் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆயிரக்கணக்கானோர் வழக்கமாக கூடி தாலி பெருக்கு பூஜை நடத்தி வந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பிலோ, சுகாதார துறை சார்பிலோ எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் பூஜைக்கு தடை விதித்த சம்பவம் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.