தொடா்ந்து ஏற்றத்தில் தங்கம்
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக உயா்ந்து,


சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.41,592-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், ஜூலை 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும், ஜூலை 31-ஆம் தேதி ரூ.41 ஆயிரத்தையும் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை தொடா்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக உயா்ந்து,
புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.24 உயா்ந்து, ரூ.41,592-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.3 உயா்ந்து, ரூ.5,199 ஆக இருந்தது.
இதுபோல, வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.72.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து,
ரூ.72,700 ஆகவும் இருந்தது. ஜூலை 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை மட்டும் பவுனுக்கு ரூ.3,976 வரை உயா்ந்துள்ளது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,199
1 பவுன் தங்கம்............................... 41,592
1 கிராம் வெள்ளி............................. 72.70
1 கிலோ வெள்ளி............................72,700
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்........................... 5,196
1 பவுன் தங்கம்...............................41,568
1 கிராம் வெள்ளி.............................72.50
1 கிலோ வெள்ளி.............................72,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...