புதுவையில் இன்று 245 பேருக்கு கரோனா: மேலும் இருவர் பலி

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 245 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
245 more test positive for Coronavirus, 2 dies in UT since last 24 hrs
245 more test positive for Coronavirus, 2 dies in UT since last 24 hrs
Updated on
1 min read

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 245 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதுச்சேரியில் 192 போ், காரைக்காலில் 6 போ், ஏனாமில் 47 போ் என மொத்தம் 245 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,624-ஆக உயர்ந்தது.

புதுவையில் 3,355 பேர் இதுவரை குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் 89 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். மேலும் 1,361 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் 819 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com