ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கு.க. செல்வம் நீக்கம்

திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆயிரம்விளக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.க செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News image
திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கு.க. செல்வம் நீக்கம்
Updated On :13 ஆகஸ்ட் 2020, 7:08 am

DIN

சென்னை: திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆயிரம்விளக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.க செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்த நிலையில், ஆயிரம்விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கு.க. செல்வத்தை திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது, திமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க. செல்வம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.