ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கடலூரில் மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

தொழுதூர் கிராமத்தில் ரூ.3.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

News image
கடலூரில் மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
Updated On :14 ஆகஸ்ட் 2020, 7:42 am

DIN


சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலமாக கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொழுதூர் கிராமத்தில் ரூ.3.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தை திறந்து வைத்தார்.

கிராமப்புற மக்களின் வாழ்விற்கு ஆதாரமாக விளங்குகின்ற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், வேளாண் உற்பத்தி திறனில் உள்ள இடைவெளியை உரிய பண்ணை அணுகுமுறை மூலம் குறைத்து உணவுப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேளாண் விளைபொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்தும் கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், சந்தையிணைப்பை வேறுபடுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து, அவர்களின் வருமானத்தைப் பலமடங்காக உயர்த்திடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

2018 - 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையில், கடலூர் மாவட்டம், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலமாக கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொழுதூர் கிராமத்தில் 3 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இம்மையத்தில் மக்காச்சோளத்திலிருந்து சிறு உருளைகளாக மாட்டு தீவனம் தயாரிக்க தேவையான இயந்திரம், தீவனம் தயாரிக்க தேவையான இடுபொருட்களை கையாளுவதற்கு 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, உலர்களம், எடை மேடை, மின்னணு தராசுகள், மக்காச்சோளத்திலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட உணவு பொருட்களான மாவு வகைகள் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் தானியங்கி நிரப்பும் இயந்திரம்ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இம்மையமானது கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து அதிக இலாபம் ஈட்ட வழிவகை செய்கிறது.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் எஸ்.ஜே.சிரு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.