புதுவையில் மேலும் 370 பேருக்குத் தொற்று: 9 பேர் பலி
புதுவையில் புதிதாக 370 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

9 deaths, 370 more COVID-19 cases in Puducherry

9 deaths, 370 more COVID-19 cases in Puducherry
புதுவையில் புதிதாக 370 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது:
புதுவையில் செவ்வாய்க்கிழமை 1,106 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 317 பேர், காரைக்காலில் 51 பேர், ஏனாமில் 2 பேர் என 370 பேருக்கு (33.45 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,396 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முல்லை வீதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் பேட்டை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 53 வயது ஆண் நபர், உறுவையாறு ஜெயராம் நகரை சேர்ந்த 39 வயது ஆண், மூலக்குளம் மோதிலால் நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த 62 வயது ஆண், வைசியால் வீதியை சேர்ந்த 79 வயது முதியவர், திலாஸ்பேட்டை மருதம் நகரை சேர்ந்த 60 வயது முதியவர், சுத்துகேணி பிரதான சாலையைச் சேர்ந்த 48 வயது ஆண், காலாப்பட்டு காந்தி நகரை சேர்ந்த 60 வயது, மூதாட்டி, அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண் ஆகிய 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.
இதனிடையே 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,909 ஆக அதிகரித்துள்ளது. புதுவை மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 3,364 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...