வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும்: கே.எஸ்.அழகிரி 

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

News image
கேஎஸ் அழகிரி
Updated On :23 ஆகஸ்ட் 2020, 2:00 pm

DIN

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தலைமையில் கடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 

சோனியா காந்தி பொறுப்பேற்று ஓர் ஆண்டு காலமான நிலையில், கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுகள் கட்சிக்குள் எழத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில்தான் நாளை, திங்கள்கிழமை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரிக்கைகள் எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம், சோனியா காந்தி இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவுசெய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது சுட்டுரையில், அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராகத் தொடர வேண்டும். கோடிக்கணக்கான இந்திய மக்களும், காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்களும் சோனியா, ராகுலை பின் பற்றுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.