ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளிகளுக்கு வர்ணம் பூசும் சேவை

வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை அரசுப் பள்ளிகளைச் சுத்தம் செய்து வர்ணம் பூச முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். 

News image

வெள்ளக்கோவிலில் அரசுப் பள்ளிகளுக்கு வர்ணம் பூசும் சேவை

Updated On :23 ஆகஸ்ட் 2020, 9:44 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளையினர் ஆசிரியர்களுடன் இணைந்து அரசுப் பள்ளிகளைச் சுத்தம் செய்து, வர்ணம் பூச முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் முதல்கட்டமாக வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில், தெப்பக்குளம் அருகே உள்ள வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை பணிகள் துவங்கின. பள்ளி வகுப்பறைகளின் உள்புறம், வெளிப்புறம், தலைமை ஆசிரியர் அறை, அலுவலக கட்டடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டன. தன்னார்வலர்கள் சண்முகராஜ், ராஜ்குமார், ஆசிரியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்நின்று களப்பணிகளைச் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.