விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுடன் உரையாடிய முதல்வர் பழனிசாமி
திருவாரூர் மாவட்டம், கோவில்வென்னி ஆதனூர் கிராமத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் முதல்வர் பழனிசாமி உரையாடி, நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார்.


திருவாரூர் மாவட்டம், கோவில்வென்னி ஆதனூர் கிராமத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் முதல்வர் பழனிசாமி உரையாடி, நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திருவாரூரிலிருந்து கார் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.
திருவாரூர் மாவட்டம், கோவில்வென்னி ஆதனூர் கிராமம் என்ற இடத்தில் வயல்காட்டில் 15 பெண்கள் களை பரித்துக்கொண்டிருந்ததை அறிந்த முதலமைச்சர் திடீரென காரை நிறுத்தி பெண்கள் களை எடுத்துக்கொண்டிருந்த வயல்காட்டிற்கு சென்று அப்பெண்களிடம் உரையாடினார்.
வயல்காட்டில் களை எடுத்தப் பெண்கள் முகக்கவசம் இல்லாமல் இருந்ததை அறிந்த முதலமைச்சர் தனது வாகனத்தில் வைத்திருந்த முகக்கவசத்தை அனைவருக்கும் வழங்கினார். அப்போது, அரசு மூலமாக அறிவிக்கப்பட்ட அனைத்து நிவாரண உதவிகளும் தங்களுக்கு கிடைத்துள்ளதா என்றும், கடந்த ஐந்து மாதங்களாக விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது கிடைக்கப்பெற்றதா என்றும் கேட்டறிந்தார்.
வயல்காட்டில் பணிபுரியும் உங்களுக்கு நியாயமான கூலி கிடைக்கிறதா என்றும் அனைத்து நாள்களும் நீங்கள் விவசாய பணிக்கு செல்கிறீர்களா என்றும் கேட்டறிந்தார்.
எங்களை போன்ற கூலி தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை வழங்கியதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எங்களைப் போன்ற ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதைப் போன்று தாங்களும் எங்களைப் போன்ற ஏழைகள் மீது அக்கறைக்கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருவதற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...