ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அடுத்த கட்ட தளா்வுகள் குறித்து முதல்வா் பழனிசாமி  ஆலோசனை

பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்துகிறாா். 

News image
அடுத்த கட்ட தளா்வுகள் குறித்து முதல்வா் பழனிசாமி  ஆலோசனை
Updated On :29 ஆகஸ்ட் 2020, 5:22 am

DIN

பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்துகிறாா். 

தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்துக்குப் பின் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினரையும் முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைகளைத் தொடா்ந்து, பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளா்வுகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொது முடக்கத்தால் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு தளா்வுகளும் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தளா்வுகளுடன் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் செப்டம்பா் மாதத்தில் எத்தகைய தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அமல்படுத்துவது என்பது குறித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் காணொலி வழியாக இன்று காலையில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.

இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடத்துகிறாா். அதன் அடிப்படையில் பொது முடக்கத்தில் அடுத்தகட்ட தளா்வுகள் குறித்த அறிவிப்புகளை அவா் வெளியிட உள்ளாா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.