கொடைக்கானலில் முழு ஊரடங்கு கடைப்பிடிப்பு
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று கொடைக்கானலில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று கொடைக்கானலில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கொடைக்கானல் முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது. கொடைக்கானல் செண்பகனூர் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விநியோகம் செய்யாததால் லாரிகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கொடைக்கானல் காவல்துறையினர் நகரின் முக்கிய இடங்களான ஏரிச்சாலை, பூங்கா சாலை, மூஞ்சிக்கல், வெள்ளி நீர்வீழ்ச்சி, சாசிட்டி வியூ, ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...