கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மேட்டுப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்
Updated On :3 டிசம்பர் 2020, 11:10 am

DIN

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மேட்டுப்பாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் யு.ஆர். பழனிசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் செல்வம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் மன்சூர் மற்றும் ராமதாஸ் வெள்ளிங்கிரி, ரங்கசாமி, மனோகரன், வி. வெள்ளிங்கிரி, ஜீவா உள்பட  பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.