காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

போடி அருகே வனத்துறையினருக்கு தீத்தடுப்பு பயிற்சி

போடி அருகே வனத்துறையினருக்கு வியாழக்கிழமை தீத்தடுப்பு மற்றும் விபத்து மீட்பு பயிற்சி தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது.

News image
போடி அருகே வனத்துறையினருக்கு தீத்தடுப்பு பயிற்சி
Updated On :3 டிசம்பர் 2020, 11:17 am

DIN


போடி: போடி அருகே வனத்துறையினருக்கு வியாழக்கிழமை தீத்தடுப்பு மற்றும் விபத்து மீட்பு பயிற்சி தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது.

போடி குரங்கணி வனப்பகுதியில் வனத்துறை சார்பில் வனப்பாதுகாவலர், வனத்துறை ஊழியர்களுக்கு வனப்பகுதியில் தீத்தடுப்பு மற்றும் விபத்து மீட்பு தொடர்பான மூன்று நாள் பயிற்சி முகாம் குரங்கணி வனத்துறை விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

வனத்துறையினருக்கு போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். வனப்பகுதியில் தீயை அணைத்தல், தீயை கட்டுக்குள் கொண்டு வருதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வனப்பகுதியில் விபத்துகள், நிலச்சரிவுகள் ஏற்படும்போது மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தல், கரடு முரடான வனப்பாதையில் பாதிக்கப்பட்டவர்களை தூக்கிக் கொண்டு வருதல் குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.  வனத்துறை ஊழியர்கள் பயிற்சியின்போது மாதிரி செயல்விளக்கங்களை செய்து பயிற்சி எடுத்துக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.