மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்புத்துறை
மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்க் குட்டியை, தீயணைப்புத்துறையினர் கயிறுக்கட்டி மீட்டெடுத்தனர்.


மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்க் குட்டியை, தீயணைப்புத்துறையினர் கயிறுக்கட்டி மீட்டெடுத்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பழையகோட்டை ஊராட்சி ஓந்தாம்பட்டியில் வசித்து வரும் கிருஷ்ணவேணி என்பவரின் வளர்ப்பு நாய் ஒன்று அருகில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான 80 அடி ஆழமும் 20 அடிக்கு தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி, நாய்க் குட்டியை உரிய முடிச்சுடன் உயிருடன் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஊர் பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...