சென்னை: சென்னை புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
இது குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைத் தகவலில்,
புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த உயரம் 21. 20 அடியாகும். 04.12.2020 காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 19.70 அடியாக உள்ளது.
இதையும் படிக்கலாமே.. 27 ஆண்டுகளுக்கு முன்பு சேமித்த கருவிலிருந்து குழந்தை; மகளை விட ஒரு வயது மூத்த தாய்
ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2373 கன அடியாக உள்ளதால் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதனால், நாரவரி குப்பம், வடகரை கிராண்ட் லைன் புழல், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதியில் கால்வாய் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


