ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மதுரையில் திமுக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மதுரையில் திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
மதுரையில் திமுக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
Updated On :5 டிசம்பர் 2020, 8:50 am

DIN

மதுரை: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மதுரையில் திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாநகர்  வடக்கு , தெற்கு மாவட்ட திமுக  சார்பில் அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி ஆகியோர் தலைமை வகித்தனர். நெல் 
நாற்றுகள் மற்றும் ஏர் கலப்பையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 
திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, குழந்தைவேலு, பழனிச்சாமி, பொன். சேது, தமிழரசி, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில்  மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம் பேசியது: 
மத்திய அரசு  வேளாண் சட்டத்தை அமல்படுத்திய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழக சட்டப்பேரவையில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.