கிருஷ்ணகிரியில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் போராட்டம்
கிருஷ்ணகிரியில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் டி. செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், துணைச் செயலாளர் வெங்கடேசன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும், வேளாண் மசோதாக்களை குறித்து விவாதிக்க மக்களவையை கூட்ட வேண்டும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு தமிழக அரசு ஆதரிக்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...