கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
நாமக்கல் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாயிகள்.
Updated On :5 டிசம்பர் 2020, 7:41 am

DIN

நாமக்கல்: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும்,  தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசைக் கண்டித்தும் நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள்  எழுப்பப்பட்டன. 

Story image

நாமக்கல் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், விவசாயிகள்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர்   உரையாற்றினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.