புதுகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் சனிக்கிழமை திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read



தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டையில் சனிக்கிழமை திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ். ரகுபதி (தெற்கு), கே.கே. செல்லபாண்டியன் (வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரியண்ணன் அரசு (புதுக்கோட்டை), சிவ.வீ. மெய்யநாதன் (ஆலங்குடி), சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் த. சந்திரசேகரன், இலக்கிய அணித் தலைவர் இராசு. கவிதைப்பித்தன், நகர திமுக செயலர் க. நைனாமுகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக  நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com