ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு

அதிமுக நிரந்தர பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

News image
ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு
Updated On :5 டிசம்பர் 2020, 9:14 am

DIN


சென்னை: அதிமுக நிரந்தர பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர்  அஞ்சலி செலுத்தினர்.

பிறகு, அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். 

அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று, அவர் ஆற்றிய அரும்பணிகளை, எந்நாளும் நினைவில் கொண்டு, கடமை உணர்வோடு பணியாற்றிட, உளமார உறுதி ஏற்கிறோம். அதிமுக என்பது ஆயிரம் காலத்துப் பயிர்; இது, தமிழ் நாட்டு மக்களுக்குத் தொண்டாற்ற தழைத்து நிற்கும் ஆலமரம் என்று உரைத்த அவரது முழக்கத்தின்படி, மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

தமிழ் நாடு அனைத்துத் துறைகளிலும் ஏற்றம் பெற்று, அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் மாநிலமாகத் திகழ்வதை, தமது ஆட்சிக் காலத்தில் உறுதி செய்தார் ஜெயலலிதா.

அந்த வகையில், தமிழக அரசு, நிறைவேற்றி வரும், எண்ணற்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், அனைவருக்கும் சென்றடைவதை, உறுதி செய்வோம் என்று, உறுதி ஏற்கிறோம்.

தமிழ் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், ஓடோடிச் சென்று உதவும் உற்ற துணையாகவும், வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் திகழ்கின்ற வகையில், அதிமுகவை உருவாக்கியவர்.

Story image


ஜனநாயகத்தின் பெயரில், ஒரு குடும்ப ஆட்சி நிலைபெற்றுவிட்டால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல இயலாது என்பதை விளக்கிக் கூறியவர்.  அவர் காட்டிய உண்மையான ஜனநாயகம் வேரூன்றவும், ஒரு குடும்பத்தின் ஏகபோக அரசியலும், ஆட்சியும் ஏற்படாத வண்ணம், மக்களாட்சியின் மாண்புகளைக் காப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட நேரங்களில், சுற்றிச் சுழன்று, அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர் ஜெயலலிதா. அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கைப் பேரிடர் நேரங்களில், தமிழ் நாட்டு மக்களுக்காக அற்புதமாய் பணியாற்றும் கழக அரசின் சிறப்பான பணிகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க, உறுதி ஏற்கிறோம்.

2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,  ஒன்றுபட்டு உழைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக, அதிமுக, மகத்தான வெற்றிபெறச் செய்வோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம் என்று உறுதி மொழி ஏற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.