தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மழை நீர் சூழ்ந்த வீடுகளுக்கு நூதன முறையில் கேஸ் சிலிண்டர் எடுத்துச் சென்ற ஊழியர்

சீர்காழியில் மழை நீர் சூழ்ந்த வீடுகளுக்கு வெள்ள நீரில் ஊழியர் ஒருவர் நூதன முறையில் கேஸ் சிலிண்டர் எடுத்துச் சென்றுள்ளார்

News image
மழை நீர் சூழ்ந்த வீடுகளுக்கு நூதன முறையில் கேஸ் சிலிண்டர் எடுத்துச் சென்ற ஊழியர்
Updated On :6 டிசம்பர் 2020, 9:15 am

DIN

சீர்காழி: சீர்காழியில் மழை நீர் சூழ்ந்த வீடுகளுக்கு ஊழியர் ஒருவர் நூதன முறையில் கேஸ் சிலிண்டர் எடுத்துச் சென்றுள்ளார். 

சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் புரெவி புயல் காரணமாக கடந்த புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து 5 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 20 சென்டி மீட்டர் மழை பதிவானது.

இதனால் சீர்காழி பகுதியில் உள்ள தட்சிணாமூர்த்தி நகர், சின்ன தம்பி நகர், எஸ்.கே.ஆர் நகர், உக்கடையார் நகர், கோவிந்தராஜன் நகர்,  என்ஜிஓ நகர், பாப்பையா நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகர்ப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதியில் உள்ள மக்கள் மழை நீரைக் கடந்து அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வெளியே சென்று வர பெரும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் சீர்காழி தட்சிணாமூர்த்தி நகரில் உள்ள குடியிருப்புகளை கடந்த 5 நாட்களாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே அப்பகுதியிலுள்ள ஒருவரது வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யப்பட்டதை அடுத்து சிலிண்டர் ஏஜென்சி ஊழியர் ஒருவர், வெள்ள நீரில் நூதன முறையில் சிலிண்டரை கொண்டு சென்றார். இது அப்பகுதி மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.