ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Updated On :6 டிசம்பர் 2020, 5:35 am

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும், கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.