ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இந்த ஆண்டில் ஆவின் நிறுவன வருவாய் ரூ.227 கோடி அதிகரிப்பு

கடந்த நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனையால் கூடுதலாக சுமார் ரூ.277 கோடி பண பரிவர்த்தனை ஆவினில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
இந்த ஆண்டில் ஆவின் நிறுவன வருவாய் ரூ.227 கோடி அதிகரிப்பு
Updated On :7 டிசம்பர் 2020, 7:23 am

DIN


சென்னை: கடந்த நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனையால் கூடுதலாக சுமார் ரூ.277 கோடி பண பரிவர்த்தனை ஆவினில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  தமிழக அரசு பால் வளத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படியும் ஆவினில் பால் விற்பனை மற்றும் பால் உப பொருள்களின் விற்பனை, இதர விற்பனைகள் அதிகரித்து விவசாயிகளின் வாழ்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது.

ஆவினின் பணப்பரிவர்த்தனை 2019-2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனை மூலம் சுமார் ரூ.335 கோடியே 821 லட்சம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் பணப் பரிவர்த்தனையில் 2020-2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் ரூ. 2392.95 கோடியும், இணையத்தின் மூலம் ரூ.1242.54 கோடியும் என மொத்தம் ரூ.3635.50 கோடி ஆகும். ஆக சென்ற நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் பால், பால் உப பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் விற்பனையால் கூடுதலாக சுமார் ரூ.277 கோடி பண பரிவர்த்தனை ஆவினில் அதிகரித்துள்ளது.

கடும் புயலிலும், காற்றிலும், மழையிலும் மற்றும் கரோனா தொற்று காலத்திலும் மக்கள் சேவையில் ஆவினின் பங்கு மகத்தானதாக அமைந்துள்ளது. இதனால் ஆவினுக்கு கூடுதலான மக்களின் வரவேற்பும், நன்மதிப்பும் அதிகமானதால் ஆவின் நிறுவனத்திற்கு இலாபம் அதிகரிப்பதோடு விவசாயிகளின் நம்பிக்கையும் அதிகம் பெற்றுள்ளது.

மேற்கண்ட தகவலை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.