பென்னாகரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திட்டங்களை திரும்ப பெறக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பென்னாகரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திட்டங்களை திரும்ப பெறக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் மற்றும் மின்சார சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பென்னாகரம் பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காலை முதலே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தின் முன்பு தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான பி.என்.பி. இன்பசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டம், மின்சாரச் சட்டம் 2020 திரும்ப பெற வேண்டும் எனவும், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் கருப்பண்ணன், சரவணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சிவன் உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக மற்றும் கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...