எட்டு வழிச் சாலைத் திட்டம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் ராமலிங்கபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தும் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள்.
சேலம் ராமலிங்கபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தும் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள்.

சேலம்: சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சேலம் - சென்னை சாலைத் திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு தடை நீடிக்கும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சேலம் ராமலிங்கபுரம் பகுதியில் விவசாயிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளும். 

எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கான தடை நீடிக்கும் என்ற உத்தரவை தொடர்ந்து சேலம் ராமலிங்கபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தும் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள்.

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை நீடிக்கும் என்ற உத்தரவு தொடர்பான செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயிகள். 

சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு தடை நீடிக்கும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தும் விவசாயிகள். 
 

படங்கள் - வே.சக்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com