ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விவசாயிகளுக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் கடையடைப்பு

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

News image
விவசாயிகளுக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில்  முழு கடையடைப்பு
Updated On :8 டிசம்பர் 2020, 4:52 am

DIN

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற கோரி தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக சத்தியமங்கலத்தில்  முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் சத்தியமங்கலம் கடைவீதி, மைசூர் டிரங் ரோடு, ரங்கசமுத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதியில் வணிக கடைகள் மூடப்பட்டுள்ளன. 

Story image

விவசாயிகளுக்கு ஆதரவாக தேநீர் கடைகளும் அடைக்கப்பட்டன. தினசரி மார்க்கெட், உழவர் சந்தை செயல்படவில்லை. தமிழகம் - கர்நாடகம் இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

மூடப்பட்ட சத்தியமங்கலம் மலர் சந்தை

மூடப்பட்ட சத்தியமங்கலம் மலர் சந்தை

ஓரிரு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டநிலையில் பயணிகள் குறைந்தளவே இருந்தனர். எப்போதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து செல்லும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் தில்லி போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்டது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பாதுகாப்புப் பணிக்காக ஆயுதப்படை காவலர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.