ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நெல்லையில் மழை: மக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கனமழையாக இல்லாமல் சாரல் போல பெய்து குளிர்ந்த வானிலை நிலவியது.

News image
வி.எம்.சத்திரம் பகுதியில் போதிய வடிகால் வசதியில்லாததால் தேங்கியுள்ள மழைநீர்.
Updated On :8 டிசம்பர் 2020, 3:57 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கனமழையாக இல்லாமல் சாரல் போல பெய்து குளிர்ந்த வானிலை நிலவியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புரெவி புயலால் எதிர்பார்க்கப்பட்ட மழை பெய்யவில்லையென்றாலும், புயல் வலுவிழந்து போன நிலையிலும் கடந்த இருநாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. 

தாமிரவருணி பாசன கால்வாய் பகுதிகளில் பிசான பருவ நெல் சாகுபடியும், மானாவாரியில் நெல், உளுந்து, பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. 

Story image


திருநெல்வேலி, கல்லூர், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூர், கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் பகுதிகளிலும் மழை பெய்து மிகவும் குளிர்ந்த வானிலை நிலவியது. இதுதவிர அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.

ஏற்கெனவே கடந்த சில நாள்களாக பெய்த மழையால் திருநெல்வேலி மாநகர குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. இதுதவிர பொலிவுறு நகரம் திட்டப்பணிகள் காரணமாக பல்வேறு சாலைகளும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. கே.டி.சி.நகர், கோடீஸ்வரன்நகர் பகுதிகளில் வடிகால் வசதிகளை உருவாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: மழை அளவு: பாபநாசம்-43, சேர்வலாறு-21, மணிமுத்தாறு-15.4, அம்பாசமுத்திரம்-5.40,சேரன்மாதேவி-0.20, நான்குனேரி-1, ராதாபுரம்-24.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.