வேதாரண்யம் பகுதிக்கு முதல்வர் வருகை: கொட்டும் மழையிலும் குடை பிடித்து மக்கள் வரவேற்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில்  மழை வெள்ளத்தால்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்த மக்கள் வரவேற்றனர்.
கள்ளிமேடு கிராமத்தில் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய முதல்வர் .
கள்ளிமேடு கிராமத்தில் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய முதல்வர் .

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில்  மழை வெள்ளத்தால்  ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்த மக்கள் வரவேற்றனர்.

வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத் காலமாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள  160 குடும்பங்களைச் சேர்ந்த 364  பேர்களை அவர் சந்தித்தார்.

பின்னர், அனைத்து குடும்பங்களுக்கும்  அரிசி, பருப்பு , வேட்டி மற்றும் புடவை உள்ளிட்ட நிவரணப் பொருள்களை வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்தப்படி வரவேற்ற மக்கள்.

வெள்ளத்தால் உயிரிழந்த நாகை மாவட்டம், திருச்சங்காட்டாங்குடி  கிராமத்தைச் சேர்ந்த மாலா என்பவரின் கணவர் பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

முகாம் வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையத்தில் சமையல் பணிகளை பார்வையிட்டார்.

மருத்துவத்துறையினர் ஏற்பாடு செய்திருந்த முகாமுக்கு சென்ற முதல்வர் சேற்றுப் புண்ணுக்கு தடவும் மருந்து குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கள்ளிமேடு முகாமில் சமையல் செய்யும் உணவுகளை ஆய்வு செய்த முதல்வர்.

அமைச்சர்கள் வேலுமணி ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் வருகைக்கு முன்பு திடீரென பலத்த மழைப் பொழிவு ஏற்பட்ட போதிலும் சாலையின் இரு புரங்களிலும் திரண்டிருந்த மக்கள், அதிமுக தொண்டர்கள் குடை பிடித்துக் கொண்டே வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com