புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

இந்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

இந்த மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :10 டிசம்பர் 2020, 4:42 pm

DIN

இந்த மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

கரோனா பரவலால் தமிழகத்தில் நிகழாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் 16-ஆம் தேதியன்று 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். 

இந்த அறிவிப்புக்கு பொது மக்கள், பெற்றோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். இதன் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதேவேளையில் கடந்த வாரம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. தற்போது கரோனா தொற்று குறையத் தொடங்கியதால் பள்ளிகளும் விரைவிலேயே திறக்கப்படலாம் என்கிற கருத்து நிலவி வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், இந்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. 

பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுப்போம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.